அராஜகம் செய்த பொலிஸ்: இளம்பெண்ணின் அதிரடி! வைரலாகும் வீடியோ

Published:Wednesday, 11 January 2017, 03:54 GMTUnder:General

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு கவுண்டர்களை திறந்து வைப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாள்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பெங்களூரை சேர்ந்த அண்ணப்பூர்னா என்ற இளம்பெண் அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நான் பயணம் செய்த களைப்பில் தலைவலி, வாந்தியால் அவதிப்பட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்

அப்போது, என்னை நோக்கி வந்த பொலிசார், லத்தியால் அடித்து என்னை பயங்கரமாக தாக்கினார்.

நான் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டினார். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதை அப்பெண் செய்தியாளர்களிடம் கூறிய போது அவரை சொல்லக் கூடாது என்று தடுத்து இழுத்து செல்லும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்