முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Published:Tuesday, 10 January 2017, 12:20 GMTUnder:Living

முருங்கை விதைகளை பலர் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் விதை பல வியாதிகளை நெருங்க விடாது. பல நோய்களை குணப்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

இன்னும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்..

தூக்கமின்மை

பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலி

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட்

முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும்.

இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.

செல்லிறப்பு மற்றும் புற்று நோய்

செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதய நலம்

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்