மாடு மேய்க்கும் மகிந்த..! வைரலாகும் காணொளி

Published:Tuesday, 10 January 2017, 11:16 GMTUnder:General

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் முக்கிய புள்ளி அவருக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு அண்மைக்காலமாக குறைந்து வருகின்றது.

அவர் மீது பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட வண்ணம் உள்ளது.

இந்த வகையில் மகிந்த எப்போதோ நடித்த திரைப்படத்தின் காணொளியை வெளியிட்டு, விவசாயத்திற்காக மகிந்த பாடுபட்டு வருவதை காட்டும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.

மகிந்த இலங்கையின் கலைத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஒருவர், அத்தோடு அம்பாந்தோட்டையில் விவசாய காணிகள் அந்நியர்களுக்கு கொடுக்கப்படுவதை தட்டிக் கேட்பவர் மகிந்தவே.

எமது தலைவருக்கு எதுவும் முடியும் என பலவகையில் மகிந்த இந்தக் காணொளி மூலமாக விமர்சிக்கப்படுகின்றார்.

இதேவேளை மகிந்த கடந்த காலத்தை மீட்டிப்பார்த்து அதனை மக்கள் மத்தியில் காட்டி ஆதரவு திரட்டும் வகையிலும் கலைஞர்களிடமும் ஆதரவு தேடும் வகையிலும் இந்த காணொளி மீண்டும் இப்போது பரப்பப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்