இந்த விடயங்கள் உங்களை அடிமையாக்கிவிட்டதா?

Published:Tuesday, 10 January 2017, 06:00 GMTUnder:General

இன்றைய கால கட்டத்தில் அனைவராலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் நாம் கடுமையாக முயன்றாலும் சில கேடு தரும் பழக்க வழக்கங்களை நம்மால் மாற்றிக் கொள்ள முடிவதில்லை.

இது போன்ற பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் மேலே படியுங்கள். கேடு விளைவிக்கும் பழக்கங்களில் இருந்து மீளும் வழிகளைக் கொடுத்துள்ளோம். இரவு முழுக்க டிவி பார்ப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது என சில கேடு தரும் பழக்கங்கள் நமது வாழ்வு முறையையே பாதிக்கக் கூடியவை. அது போன்ற ஏழு பழக்க வழக்கங்களும், மீளும் வலிகளும் கீழே...

1. இரவில் மது அருந்துதல் - இரவில் மது அருந்துதல் மகிழ்ச்சி தரும் என்பது உண்மையே. காரணம் மது உடலில் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி பகல் முழுதும் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.

அதே நேரத்தில் இந்த பழக்கம் உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட மாக்டெயில் போன்ற ஆல்கஹால் இல்லாத பானங்களை அருந்தலாம். இதன் மூலம் மது அருந்தும் பழக்கத்திலிருந்து மெதுவாக விடுபடலாம்.

2. இரவில் அதிக நேரம் டிவி பார்த்தல் - இந்த பழக்கம் தூக்கத்தை கெடுத்து பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. டிவி பார்ப்பதற்கு பதிலாக இரவில் புத்தகம் படித்தல் மற்றும் மெல்லிசை கேட்டல் போன்றவற்றின் மூலம் நல்ல தூக்கம் பெறலாம்.

3. போதிய அளவு நீர் அருந்தாமை - சிலர் போதுமான நீர் அருந்த மாட்டார்கள். காரணம் கேட்டால் ‘நீர் அருந்த மறந்து விட்டேன்' என்று விசித்திரமான பதில் அளிப்பார்கள். இது போன்றவர்கள் எப்போதும் தண்ணீர் பாட்டிலை அருகில் வைத்துக் கொள்ளலாம். அல்லது நீர்சத்து நிறைந்த பழங்களை உண்ணலாம்.

4.இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துதல் - சில ஆராய்ச்சி முடிவுகள், ஸ்மார்ட் போனிலிருந்து வரும் நீல நிற ஒளி தூக்கத்தை பாதிக்கும் என்று கூறுகின்றன. எனவே இரவில் போன் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்கள் தூங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் முன்னதாகவே போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது கடினமாக இருந்தாலும் உளவியல் ரீதியாக இந்த பழக்கத்திலிருந்து மீள இதுவே சிறந்த வழி.

5. அதிகப்படியாக சாப்பிடுதல் - உணவில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது என்பது சில நேரங்களில் உண்மைதான். ஆனால் பசிக்கு அதிகமாக உணவு உண்பது தீமை தரும். அதிகப் படியாக சாப்பிடும் வழக்கம் உடையவர்கள் பசி சாப்பிட வேண்டும் என தோன்றும்போதெல்லாம் உண்மையிலேயே தங்களுக்கு பசி எடுக்கிறதா எண்டு தங்களைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் இந்த பழக்கத்தை மாற்றலாம்.

6. காபி மோகம் - சிலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடித்தே தீர வேண்டும் என்ற அளவு காபி மோகம் இருக்கும். உண்மையில் இது மிக தீங்கான பழக்கம். இதிலிருந்து விடுபட எழுந்தவுடன் நீர் அருந்தலாம். நாளடைவில் காலையில் எழுந்தவுடன் இயல்பாகவே தாகம் ஏற்பட்டு விடும்.

7. உடற்பயிற்சி கூடத்தில் சோம்பலாக இருத்தல் - சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றும் உடற்பயிற்சி செய்யாமல் சோசியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாகி விடுவார்கள். உடற்பயிற்சியின் பலன் கிடைக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்தே தீர வேண்டும். ஊக்கம் தரும் பாடல்களை கேட்பதன் மூலமும், தினமும் மாறுபட்ட பயற்சிகளை செய்வதன் மூலமும் உடற்பயிற்சி கூடத்தில் கவனம் சிதறாமல் இருக்கலாம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்