அட எவ்வளவு அழகா துணி துவைக்குது இந்த குரங்கு..!

Published:Tuesday, 10 January 2017, 05:37 GMTUnder:Pets & Animals

நான் இப்பொழுது காண்கிறேன் இந்த உலகம் வேகமாக நகர்வதை.

காலம் நகர்வது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு தருணத்தில் எல்லா நினைவுகளும் கூடிவிடுகின்றன..

அந்த நினைவுகளில் ஒன்று தான் இந்த வீடியோ..... நான் சிறு வயதில் இருந்த பொழுது, வீட்டில் துணி துவைப்பதற்கு என்று தனி இடம் இருக்கும். அதில் தான் துணி துவைப்பார்கள்...

ஆனால், இன்றைய காலம் கம்ப்யூட்டர் காலமல்லவா..! அதனால் வீட்டிலும், காலத்திற்கேற்றவாறு மாறிவிட்டார்கள்..

ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி இயந்திரங்கள்... மிக்ஸி, கிரைண்டர், துணி துவைக்க வாஷிங்மெஷின் என அனைவரின் வீட்டிலும் இயந்திரங்களின் ஆட்சி ஆரம்பித்துவிட்டன.

அப்படி இருக்கையில், இப்பொழுது எல்லாம் யாரும் துணி துவைப்பதே இல்லை.. மொத்தமாக தூக்கி வாஷிங்மெஷினில் போட்டால் போதும் சில நிமிடங்களில் அது துவைத்துக் கொடுத்துவிடுகின்றன.

ஆனால், இந்த வீடியோவில் உள்ள குரங்கு எவ்வளவு அழகாக துணிக்கு சோப்பு போட்டு அடித்து துவைத்து காயவைக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்