83 வயதில் டென்னிஸ் விளையாட வந்த பாட்டி

Published:Monday, 09 January 2017, 23:34 GMTUnder:General

முன்னாள் அர்ஜெண்டினா டென்னிஸ் வீராங்கனை அனா ஒபரியோ டி பெரெய்ரா இரவோலா 83 வயதில் அர்ஜெண்டினா மூத்தோர் டென்னிஸ் போட்டியில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இரவோலா, எனக்கு தற்போது 83 வயதாகிறது. எனக்கு 10 குழந்தைகளும், 37 பேரப்பிள்ளைகள் உள்ளனர். நான் 1940ல் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தினேன். நான் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வந்த காலம் அது.

இருப்பினும் எனது கணவர் மற்ற ஆண்களுடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் போட்டியில் டென்னிஸ் விளையாடுவதை விரும்பவில்லை. அதனால் நான் அப்போது டென்னிஸ் போட்டியில் பங்குபெறுவது நிறுத்த வேண்டியிருந்தது. இருப்பினும் தற்போது கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.


Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்