சாதாரண லேப்டாப்பை எளிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றலாம்

Published:Monday, 09 January 2017, 20:29 GMTUnder:Technology

தொடுதிரை வசதி கொண்ட மொபைல் போன்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும். அதே போல, சாதாரண லேப்டாப்பை தொடுதிரை (டச் ஸ்கிரீன்) திரையாக மாற்றலாம். தொடுதிரை வசதியுடன் கூடிய லேப்டாப்பை வாங்க வேண்டும் என்பது லேப்டாப் வாங்குபவர்களின் ஆசையாக இருக்கும். இருப்பினும் சாதாரண லேப்டாப்பை விட தொடுதிரை லேப்டாப் விலை அதிகம்.

தற்போது சாதாரண லேப்டாப்பை, தொடுதிரை லேப்டாப்பாக மாற்றும் தொழில்நுட்பம் வந்துள்ளது. ஏர்பார் (AirBar) என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், லேப்டாப்பில் பொருத்தும் வண்ணம் சிறிய பட்டை போன்று உள்ளது.

இதை லேப்டாப் யுஎஸ்பி போர்டில் பொருத்திவிட்டால், சாதாரண திரை, தொடுதிரையாக மாறிவிடும். இந்த ஏர்பார் பொருத்திய பின் சாதாரன தொடுதிரை லேப்டாப் போல இது செயல்படும். இதன் விலை 5000 முதல் 7000 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்