முதியவர்கள் பகலில் உறங்குவதால் புத்துணர்ச்சி பெறலாம்: ஆய்வில் தகவல்

Published:Sunday, 08 January 2017, 21:07 GMTUnder:General

வயதான நபர்கள் தினசரி பகல்பொழுதில் உறங்கி எழுவதன் மூலமாக, மன அமைதி மற்றும் புத்துணர்ச்சி பெறலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற நாட்டு மக்களைவிடவும், சீனாவைச் சேர்ந்த வயதான நபர்கள் அதிக மகிழ்ச்சியுடனும், புத்துணர்வாகவும் செயல்படுவதாக, தெரியவந்தது.

இதற்கான காரணம் பற்றி அவர்களிடம் விசாரித்தபோது, தினசரி பகல்பொழுதில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக உறங்கி எழுவதால், தங்களுக்குப் போதுமான மன அமைதி மற்றும் புத்துணர்ச்சி கிடைப்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற பலர் 65 வயதிற்கும் மேலானவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே, சராசரியாக, 30 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை உறங்குபவர்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது. பகலில் ஓய்வு எடுப்பதன் மூலமாக, வயதானவர்களின் மூளைக்குத் தேவையான பிராண வாயு மற்றும் அமைதி கிடைக்கிறது. இதுவே, அவர்களின் புத்துணர்ச்சி பெற முக்கிய காரணம் எனவும் ஆய்வின் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்