7 மாத குழந்தை தலைக்குள் 3.7 லிட்டர் திரவம்!

Published:Saturday, 07 January 2017, 22:44 GMTUnder:General

உலகின் மிகப்பெரிய தலைகொண்ட சிறுவனில் மண்டை ஓட்டுப் பகுதியில் இருந்து சுமார் 3.7 லிட்டர் திரவத்தினை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த கமலேஷ் தாஸ் மற்றும் கவிதா தம்பதியின் 7 மாத குழந்தையான மிருதுயுஞ்செய், அரியவகையிலான ஹைட்ரோசீபாலஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான்.

இந்தவகை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டை ஓட்டுப் பகுதியில் திரவம் கோர்த்து தலைப்பகுதி தர்பூசணி அளவுக்கு பெரிதாக இருக்கும். புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து, அவனது மண்டை ஓட்டுப்பகுதியில் இருந்து சுமார் 3.7 லிட்டர் அளவு திரவத்தினை வெளியில் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அந்த குழந்தையின் மண்டை ஓட்டுப் பகுதியில் 5 லிட்டர் அளவுக்கு திரவம் இருந்தது என்று தெரிவித்தனர். சிறுவனுக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் சிறுவன் இயல்பு நிலைக்குத் திரும்புவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்