2017 -ல் அதிர்ஷ்டமான ராசிகாரர்கள் யார் தெரியுமா?

Published:Saturday, 07 January 2017, 19:10 GMTUnder:General

2016-ல் அனைத்து கவலைகளும் அகன்று புத்தம் புதிய ஆண்டாக 2017 பிறந்திருக்கிறது. இந்த புதிய ஆண்டில் அதிர்ஷ்டமான ராசிகாரர்கள் யார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள் . இந்தாண்டில் யாருக்கு செல்வம் கொழிக்கும், தொழில் அல்லது பணியில் முன்னேற்றம் ஏற்படும், திருமண யோகம் யாருக்கு என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்த கணிப்புகளை தற்போது காணலாம்.

அதிர்ஷ்ட ராசிகாரர்கள்: ஜோதிடர்களின் கூற்றுப்படி , 2017-ம் வருடம் துலாம், கும்பம், சிம்மம், மிதுனம், தனுசு மற்றும் கன்னி போன்ற ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசிகாரர்கள் மன கஷ்டத்தில் இருந்து விடுப்பார்கள் . உடல் ஆரோக்கம் நலம் பெறும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும்.

துரதிஷ்ட ராசிகாரர்கள்: விருச்சிகம், ரிஷபம், மீனம், கடகம், மகரம் மற்றும் மேஷம் போன்ற ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு சற்று மந்தமாகதான் செல்லும். அதற்காக நீங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். உடல்நலம் பாதிப்புள்ளாகலாம். கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புடனும் செயல்படுவது நல்லது. வருட கடைசியில் உங்களுக்கு சிறப்பாக அமையும். இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் துன்பங்களை தாங்கி கொண்டால் வருடத்தின் இறுதி சிறப்பாக அமையும். நம்பிக்கையே வாழ்க்கை.

பணி உயர்வில் அதிர்ஷ்டம் யாருக்கு: 1993, 1981, 1969, 2000, 1988, 1976, 1964, 1994, 1982, 1970 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்தாண்டில் பணியில் நல்ல உயர்வு பெறுவார்கள்.

தொழிலில் வெற்றி கிட்டுவது யாருக்கு: 1990, 1978, 1966, 1994, 1982, 1970, 1998, 1986, 1974, 1962 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்தாண்டில் தொழில் தொடங்கலாம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அவதூறு மற்றும் கிசுகிசுகளுக்கு உள்ளாபவர்கள்: 1991, 1979, 1967, 1995, 1983, 1971, 1996, 1984, 1972 , 1960.ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்தாண்டில் அவதூறு மற்றும் கிசுகிசுகளுக்கு உள்ளாகுவார்கள்.

திருமண யோகம்: 1988, 1976, 1990, 1978, 1996, 1984, 1972 ஆகிய ஆண்டுகளில் பிறந்த திருமணமாகதவர்களுக்கு இந்தாண்டில் திருமண யோகம் கிட்டும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்