குழந்தைகளை தூக்கி வீசும் பெற்றோர்: இதெல்லாம் ஒரு காரணமா?

Published:Saturday, 07 January 2017, 13:18 GMTUnder:Adventure

மனிதன் என்னதான் தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனை புரிந்தாலும், பராம்பரியம் என்ற பெயரில் பின்பற்றப்படும் சில வழிமுறைகள் அவனின் எட்டா அறிவையே காட்டுகிறது.

உலக அளவில் பராம்பரியத்தை பின்பற்றுவதில் முதன்மையான நாடாக இருப்பது இந்தியாதான். அதிலும் ஒரு சில பராம்பரிய முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கும்.

அப்படிய ஒரு பராம்பரியம் தான் குழந்தைகளை தூக்கி வீசுவது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாக மாநிலத்தில் உள்ள ஒரு சில கிராமங்கள் இந்த பராம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.

அதாவது, குழந்தை பிறந்து ஒரு வயது பூர்த்தியாவதற்குள் அக்குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச வேண்டும்.

கட்டிடத்தின் மேலே நின்றுகொண்டிருக்கும் நபர் அக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தூக்கிவீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

கீழே ஒரு குறிப்பிட்ட நபர்கள், துணியை விரித்து வைத்து, அக்குழந்தையை தாங்கி பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். மேலே உள்ள நபர் குழந்தையை தூக்கி வீசியவுடன், கீழே உள்ளவர்கள் அக்குழந்தையை கச்சிமாக பிடித்துவிடுவார்கள்.

எதற்காக இப்படி?

இவ்வாறு குழந்தையை தூக்கி வீசினால் அக்குழந்தைக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆனால், இதுபோன்று குழந்தைகளை தூக்கிவீசும்போது, குழந்தை தவறுதலாக கீழே விழுந்தால் ஏற்படும் ஆபத்தினை இவர்கள் உணராமல் இருப்பதை கண்டித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் இன்றுவரை ஒருசில கிராமங்கள் இதனை பின்பற்றிக்கொண்டு தான் இருக்கின்றன.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்