இறந்த குழந்தையை 15 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற தந்தை! மனதை உருக்கும் சோகம்

Published:Saturday, 07 January 2017, 07:46 GMTUnder:General

இறந்த குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு 15 கி.மீ தூரம் தந்தை தோளில் வைத்து தூக்கிச் சென்ற பரிதாபம் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நோய்வாய்ப்பட்ட சுமி திபார் என்ற 5 வயது சிறுமியை பல்லஹரா சமூகம் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

நேற்று அந்த குழந்தை இறந்துவிடவே அதை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்ல மருத்துவமனையிடம் ஆம்புலன்ஸ் வாகனத்தை கேட்டுள்ளார். 

ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் தர மறுக்கவே, இறந்த சுமி திபாரின் உடலை மருத்துவமனையிலிருந்து 15 கி.மீ தூரம் உள்ள வீட்டுக்கு தோளில் வைத்து தூக்கிச் சென்றுள்ளார்.

இந்த விவகாரம் பலமுறை நடந்தும் அரசியல் பிரமுகர்கள் என்ன நடவடிக்க எடுத்தனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோன்ற சமூக அவலம் நீடித்துக் கொண்டிருப்பது மிகவும் வருந்ததக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்