அதிர்ச்சியூட்டும் இயற்கை பேரழிவுகள்...

Published:Friday, 06 January 2017, 20:44 GMTUnder:General

மனித இனத்தை மிக கடுமையாக அச்சுறுத்தும் பேரழிவு என்றால் அது இயற்கையால் வரும் பேரழிவு தான். சுனாமி, புயல், நிலநடுக்கம் என மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத தாக்கத்தை இயற்கை பேரழிவுகள் சில நொடிகளில் ஏற்படுத்தி விட்டு செல்கின்றன.

புவி மனிதனுக்கு மட்டும் உரியதன்று. உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிர்கள் என எண்ணற்றவைகளின் வசிப்பிடம். புவியின் சுற்றுச்சூழலானது இவ்வனைத்தும் வாழத் தேவையான தகுதிகளைக் கொண்டிருப்பதனாலேயே உயிரினங்கள் தோன்றின.

புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முதன் முதலிலில் தோன்றியவை உயிரற்ற சடப்பொருட்களே. பின்னர் ஏதோ ஒரு நிச்சயமற்ற நிகழ்வினால் ஏற்பட்ட மாறுதல்தான் உயிரினம். புவியில் வாழும் மற்ற உயிரின அமைப்புகளில் தன்னை உயர்வானதாக கருதிக் கொண்டிருக்கும் உயிரினமே மனிதன்.

மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரினமும் இயற்கைக்கு எதிராக, வரம்புமீறி, தன்னல நோக்கத்துடன் தனக்குத் தேவையான வசதி களை கட்டமைத்துக்கொள்ள முயல்வதில்லை. அவ்வாறு கட்டமைத்துக் கொண்டாலும் அது இயற்கையின் நிகழ்வுகளில் அல்லது சுழற்சியில் ஒரு பகுதியாக இருக்குமேயன்றி மனிதனைப்போல் இயற்கை சுழற்சினின்று பிரிந்து எங்குமே முடிவடையாத ஒரு வழிப்பாதையில் சென்று வழிமுட்டி நிற்பதில்லை.

பண்டைய மனிதனின் செயல்கள் இயற்கையோடு ஒன்றியிருந்தன. மனிதனுக்கு இயற்கையுடன் நல்ல தொடர்பிருந்தது. தன்னுடைய எல்லா தேவைகளையும் இயற்கையினை பாதிப்படையச் செய்யாமல் பூர்த்தி செய்து கொண்டான்.

தற்போதைய மனிதன் இயற்கையினை தான் நினைத்தவாறு இயற்கையை சுரண்டி தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். மண்ணைத் தோண்டி, நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி, விண்வெளியை உலோகக் குப்பைகளால் நிரப்பி, புவியின் கருப்பைக்குள் வாழும் அனைத்து உயிரினங்களின் அழிவிற்கு இறுதி சாசனம் எழுதுகிறான். அதனால் பேரழிவுகளும் அச்சுறுத்தல்களும் மனிதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்