தனுஷ் முகத்தை பார்க்கவே சங்கடமாக உள்ளது: அமலா பால் ஓபன் டாக்

Published:Friday, 06 January 2017, 14:48 GMTUnder:Entertainment

தனது திருமண வாழ்கை முறிவு குறித்து நடிகை அமலா பால் மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது,

நானும், என் கணவர் விஜய்யும் பிரிந்து விவாகரத்து கோர நடிகர் தனுஷ் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை.

அவருக்கும் இந்த விஷயத்திற்கும் தொடர்பு இல்லை. ஏ.எல். விஜய் நானும், விஜய்யும் பிரிய முடிவு செய்தபோது அது குறித்து அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார்.

எங்களை பிரிய வேண்டாம் என்று கூறி எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். நண்பர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவு தான். அதை தான் எங்களுக்குள் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது, வருத்தமாக உள்ளது.

கஷ்டம் எதுவுமே இல்லாமலேயே என்னையும், தனுஷையும் பற்றி ஏதேதா பேசப்படுவதால் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் என்று கூறியுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்