தனுஷ்கோடி - ஒரு துயரத்தின் சாட்சி!

Published:Tuesday, 03 January 2017, 18:59 GMTUnder:General

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். அதனால், தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த துயரத்தைப் பார்ப்போம்.

இன்று எத்தனையோ அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின்பும் நம்மால் சென்னை வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. அப்படியிருக்க 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூறாவளி வந்து ஒரு ஊரையே விழுங்கப் போகிறது என்று யாருக்குத் தெரிந்திருக்கும்.

துயரமாக அது நடந்தது 1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது.

துரதிருஷ்டவசமாக, சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதன் பின்னர், தமிழ் நாடு அரசு, இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. இன்று: தனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது.

இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்