விளையாட்டு மைதானத்தில் வீரர் அரங்கேற்றிய செயல்... வெளிச்சம் போட்டு காட்டிய கமெரா!...

Published:Friday, 30 December 2016, 10:27 GMTUnder:Sport

ருவாண்டா நாட்டில் கால்பந்து போட்டியின் போது சூனியம் வைத்து கோல் அடித்த கால்பந்து வீரரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருவாண்டா நாட்டில் அஜம் Rwandan Premier League கால்பந்து தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் Mukura Victory அணியும், Rayon Sports அணியும் மோதி உள்ளன.

போட்டியின் போது முக்குரா விக்டோரியா அணி முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது. பல முயற்சிகள் செய்தும் ரயோன் ஸ்போர்ஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ரயோன் அணி வீரர் Moussa Camara , எதிரணியான Mukura Victory கோல் போஸ்ட் அருகே சென்று அங்கு மாந்திரீகம் செய்து ஒரு சிறிய பொருளை சூனியமாக வைத்து ஓடி வந்துள்ளார்.

அவர் கோல் போஸ்ட் அருகே சென்றது, விக்டோரியா அணியின் கோல்கீப்பரும், மற்ற வீரர்களும் அவரை விரட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து மவ்சா கமரா தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த சில நிமிடங்களில் வீரர் மவ்சா கமரா ரயோன் அணி சார்பாக அசத்தலான ஒரு கோல் அடித்து சமன் செய்தார். போட்டியில் தோல்வி அடைவது போல இருந்த ரயோன் அணி சூனியம் வைத்து கோல் அடித்து போட்டியை சமன் செய்தது.

இதையடுத்து சூனியம் வைத்ததன் காரணமாக பிரச்னை எழுந்துள்ளது. ரயோன் அணிக்கும், மவ்சா கமராவுக்கும் அபராதம் விதிக்கப்படுள்ளது. மேலும் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்