கடவுளையும்… மனிதனையும் இணைக்கும் ESP சக்தி…

Published:Thursday, 29 December 2016, 23:30 GMTUnder:Technology

உலகில் மர்மமான அல்லது கடவுளை தொடர்பு கொள்வது என்று நிறைய மர்மங்கள் இருக்கின்றன. மர்மங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. இப்போது, நாம் பார்க்கப் போவதும் அது போன்ற மர்மமான ஒன்று தான். இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவன் மனிதனா?? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. எழாமலும் இருக்கும்.

நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம். மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து பார்க்கின்றார்கள் மருத்துவர்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதி உண்டு. இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை.

ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூளையின் மின்னதிர்வை ஏற்படுத்துவதன் மூலம் துளி சக்தியினை உண்டாக்க முடியும். ஆனால், அது செயற்கையாக தூண்டும்போது, மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அந்த ஆராய்விற்கு இன்று வரை வாய்ப்பும் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது. இங்கு சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக் கொண்டு சிவன் பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றது.

புராணங்கள் என்பது நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே பார்த்தோமானால் சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும். அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம் என்று நான் தேடிய ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகின்றேன்.

ESP என்பது என்ன? அறிவியல் ரீதியாக சிவனை பார்க்கின்றேன் அன்பே சிவன் உனக்குள்ளேயே கடவுள் இருக்கின்றான். அவனை வெளியே தேடாதே என்பது இந்து மதக் கொள்கை என்றும் கூறலாம்.

சாதாரண மனிதரான சிவன் என்பவர் தியானம் ஆழ்மன சக்தியை அதீதமாக திரட்டி அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. சிவன் தொடர்பாக கூறப்பட்டு நம்பப்பட்டு கொண்டு வரும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைத்து தேவர்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே வர்ணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது. அதாவது சிவன் மட்டுமின்றி அவருடன் அவரைப்போன்று சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது தான்.

காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால், இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். இதேவேளை சிவனைத்தவிர்த்த மற்ற அனைத்து தேவர்கள் தெய்வங்களும் ஏதோ ஒரு தனித்துவ சக்தியினைக் கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றார்கள்.

உதாரணம் வாயு தேவன், அக்கினி தேவன் எனத் தொடங்கி கல்விக்கு சரஸ்வதி செல்வத்திற்கு லட்சுமி இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் கடவுள்களாக கூறப்படுவது அவரவரின் தனிச் சக்திகளின் அடிப்படையிலேயே.

கடவுள் என்பவர் ஒளியாக காணப்படுகின்றார் என்பது நவீனத்துவ பிக்பாங் கொள்கைக்கு கூட இது பொருந்தும்! ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது என நான் கூற வருவது இப்போது உங்களுக்கு சரியென்றும் கூடப்பட்டு விடலாம். என் சிற்றறிவுக்கு எட்டாத ஏதேனும் இருந்தால் எமது தளத்தில் பதிவிடுங்கள் அது எனக்கு நல்லதே!!!!!

கடவுள் மூளையே என்பதில் எனது சந்தேகம் என்னவென்றால், தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது.

அப்படியானால் தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை இயக்க முடியுமா? இதன் மூலம் விசேட சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றது.

ஆனாலும் ஆழ்மனத்தின் சக்தி தற்போதைய நவீன உலகில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றதனை அறிய முடியுமானதாகவே இருக்கின்றது. தற்போதைய உலகில் ஒரு சிலர் அதீத சக்திகளை கொண்டுள்ளதனை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதனை உறுதியிட்டு கூற முடியும்.

ESP மூளையின் சக்தியில் உள்ளுணர்வும் உள்வாங்கப்படுகின்றது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் நடப்பனவற்றை ஒருவரால் இந்த சக்தியின் மூலமாகவே கூற முடிகின்றது. வரலாற்றிலும் சரி தற்போதைய உலகிலும் சரி இது நிரூபணமான ஒன்றே.

ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பும் ஓர் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது “ஹைபோதாலமஸ்” மூளையின் முக்கிய உறுப்பு. உடல் செயற்பாடுகள் அனைத்திற்கும் உதவுகின்றது. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன்களின் கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு, செல்களின் மீள் உருவாக்கம் இப்படி பல முக்கிய செயற்பாடுகளையும் செய்வது இதுவே.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் தலைமையில் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ஹைபோதாலமஸில் GnRH எனும் ஹார்மோனை கட்டுப்படுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலனாகிறது. ESP மூளையுடன் தொடர்பில் சக்திக் கணிப்பிலும் சக்தி வெளிப்பாட்டிலும் வரலாற்றுடன் நவீன கால மனிதர்களையும் இணைத்துப்பார்க்க வேண்டியதும் அவசியமானதாகும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்