ஜல்லிக்கட்டு என்றால் என்ன?... சுவாரசியத்தை தெரிஞ்சிக்கலாம் வாங்க...

Published:Thursday, 29 December 2016, 16:36 GMTUnder:Sport

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டை ஏறுதழுவல் என்றும் அழைப்பர். காளை மாட்டை ஓடவிட்டு அதனை மனிதர்கள் அடக்குவது, கொம்பை பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டாகும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை நார்த்தாமலை, தேனி, தேனிமலை ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்தது.

வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சு விரட்டு என்ற பெயரில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. நீண்ட கயிற்றால் காளையை கட்டு இரண்டு பக்கமும் ஆண்களை அதனை இழுக்க, சிலர் காளையின் கொம்பில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை அல்லது பரிசை எடுக்க முயற்சிப்பார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர்கள் இந்த பாரம்பரிய வீர விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவுதல் நடந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

மேலும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு பற்றி கூறப்பட்டுள்ளதுடன் கொல்லேறு தழுவுதல் அதாவது கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குதல் என்று இலக்கியங்களில் சிறப்பாக விபரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமிழகத்தின் இந்த பாரம்பரிய வீர விளையாட்டை விளையாட உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. காளைகள் தும்புறுத்தப்படுவதாக கூறி சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை அடுத்தே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தடையை நீக்கி உத்தரவிடுமாறு தமிழர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் வழக்கு தொடர்ந்தும் உள்ளன. நீதிமன்ற தடை காரணமாக சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. எனினும் அங்காங்கே தடையை மீறியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு தமிழர்களின் உழவர் திருநாளான பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டை விளையாட நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கப்படுமா என்று ஆர்வத்தோடு தமிழர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்