சாம்சங் பே....!! பணத்தை செலுத்த புதிய வழி

Published:Tuesday, 20 December 2016, 13:03 GMTUnder:Technology

மோடியின் “ ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்பு, டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்கும் நமக்கு, தற்போது இந்திய நிறுவனமான பேடிஎம் போன்ற ஆப்ஸ் மூலம் , பணத்தை செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மேலும் பில் கட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக , அயல் நாட்டு நிறுவனமான ,MASTER CARD மற்றும் VISA மட்டமே இருந்தது. தற்போது, இந்திய நிறுவனமான ” PAYTM “மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் , சாம்சங் பே(( Samsung pay ), இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இதன் மூலம் சுலபமான முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது, சாம்சங் நிறுவனத்தின் பார்வை சற்று அதிகமாகத்தான் உள்ளது. இந்திய மார்கெட்டில் சேம்சங் மேலும் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது .

தற்போது சாம்சங் பே ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா , சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மலேசியாவிலும் சாம்சங் பே முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது, மிக விரைவில் இந்தியாவில் இந்த சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.குறிப்பாக அடுத்த மாதம் தொடக்கத்திலேயே , சாம்சங் பே முறை , செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்