பால் கொடுக்கும் 2 மாத ஆட்டுக்குட்டி! கோடி அதிசயங்களில் ஒன்று...

Published:Tuesday, 13 December 2016, 15:57 GMTUnder:Pets & Animals

இந்தியாவில் ஆட்டுக்குட்டி ஒன்றை அப்பகுதி மக்கள் தெய்வீக அதிசயமாக கருதி வழிபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம், Birothi கிராம மக்களே 2 மாத ஆட்டுக் குட்டி ஒன்றை வழிபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன் Birothi கிராமத்தில் பிறந்து தாயிடம் பால் குடித்து வந்த ஆட்டுக் குட்டி ஒன்று, ஒரு மாதத்திற்கு பின்னர் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

ஆட்டுக் குட்டி பால் கொடுப்பது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்செய்தி தீயாக பரவ அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் ஆட்டுக் குட்டியை தெய்வமாக கருதி வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், இந்த ஆட்டுக் குட்டி கோடி அதியங்களில் ஒன்று. இதில் தெய்வீகம் ஏதுவும் இல்லை. ஹார்மோன் காரணமாக இது நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்