செல்லப் பிராணிகளுடன் பழகிப்பாருங்கள் என்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

Published:Monday, 12 December 2016, 11:03 GMTUnder:General

இதுதொடர்பாக, இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு நடத்தி, இதனை உறுதி செய்தும் உள்ளனர். இதன்படி, நீண்ட காலமாக, மனக் குழப்பம், மன அமைதியின்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, செல்லப் பிராணிகளை கொஞ்சுவது, அவற்றுடன் நட்புறவை மேம்படுத்துவது போன்றவை நல்ல தீர்வு வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, நிம்மதியைப் பெற முடிந்த அளவு மனிதனுக்கு உதவுகின்றன. இதற்காக, அவை மனிதனுடன் இணக்கமான நட்புறவை மேற்கொள்கின்றன என்றும், அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக மனநிலை சார்ந்த பிரச்சினைளுக்கு ஆட்பட்டவர்கள்கூட, செல்லப்பிராணிகளுடன் சிறிது நேரம் பழகினால் மன நிம்மதியை உணர முடியும் எனவும், அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்