விபத்தில் துண்டான காதை கையில் வைத்து தைத்த வைத்தியர்: காரணம் தெரியுமா?...

Published:Saturday, 12 November 2016, 07:55 GMTUnder:General

சீனாவின் Xi'an நகரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றும் Guo Shuzhong என்பவர் வினோத சத்திரசிகிச்சை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அதாவது Ji எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி தனது காதை இழந்ததுடன் கேட்கும் திறனையும் இழந்துள்ளார். இவருக்கும் கேட்கும் திறனை மீட்டுக்கொடுப்பதற்காக இவ்வாறன சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி துண்டான காதினை கையில் இணைத்துள்ளதுடன் செயற்கை காது ஒன்றினைப் பொருத்தி இரண்டிற்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கையுள்ள காதின் ஊடாக ஒலிகள் உணரப்பட்டு செயற்கை காதிற்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து மூளைக்கு செல்லும் சமிக்ஞையின் ஊடாக அவரால் கேட்டல் திறனை பெறமுடியும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்