திருடனுக்கு தாத்தா கொடுத்த ஷாக்: என்ன ஒரு எனர்ஜி தாத்தா உங்களுக்கு?...

Published:Tuesday, 01 November 2016, 11:57 GMTUnder:Robbery

திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற திருடனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஈஸியாக மாட்ட வைத்திருக்கின்றார் 84 வயதான தாத்தா.

நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு தப்பி ஓடிக்கொண்டிருந்த திருடனையே எட்டி உதைத்து தரையில் விழச் செய்துள்ளார் அந்த தாத்தா. அப்போது திருடன் தரையில் விழுந்துள்ளான். இதன்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து திருடனை பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது தாத்தாவும் தரையில் விழுந்துள்ளார். எனினும் காயம் எதுவும் அவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. தாத்தாவின் இத்துணிகரச் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்