ஓய்வு பெறுகிறார் டோனி... அதிர்ச்சியில் ரசிகர்கள்!...

Published:Tuesday, 01 November 2016, 07:58 GMTUnder:Sport

கடந்த 2014ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தப் போவதாக கூறி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஒய்வு பெற்றார். சமீபத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.

அடுத்ததாக அடுத்த ஆண்டு யூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் மினி உலககோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைக்கு டோனியே அணித்தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மினி உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணித்தலைவர் டோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என இவரது நெருங்கிய நண்பர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ம் ஆண்டுடன் டோனிக்கு 38 வயதாகிறது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட வயதைவிட உடற்தகுதி தான் அவசியம். எனவே அதற்கேற்ற உடல்தகுதியோடு தான் டோனி இருக்கிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்