வைரத்துக்கு ஆசைப்பட்ட மூதாட்டி..! காட்சிப்படுத்திய சி.சி.டி.வி...

Published:Wednesday, 19 October 2016, 16:59 GMTUnder:Robbery

சென்னையை சேர்ந்த வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் நகை திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் இருந்து திருமணத்திற்காக சென்னை வந்திருந்த சைலஜா என்பவர், சென்னையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். இவர் தனது பையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் வைர நகைகைளை வைத்திருந்துள்ளார்.

ஜவுளிக்கடையை விட்டு வீட்டிற்கு சென்ற சைலஜா தனது பையை திறந்துபார்த்தபோது தனது நகைகள் காணமால் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து உடனடியாக ஜவுளிக்கடை மற்றும் அந்தப்பகுதியில் தீபாவளிக்காக பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.டி.வி கமெராக்களின் பதிவுகளை பொலிசார் துல்லியமாக ஆராய்ந்தனர்.

அப்போது பச்சை நிற சேலை அணிந்த ஒரு பெண், சைலஜா அருகில் வருவதும், பிறகு அங்கிருந்து செல்வதுமாக இருந்தது தெரியவந்தது. அந்த பச்சை நிற சேலை அணிந்த பெண்ணின் நடவடிக்கைகள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

தொடர்ந்து ஒவ்வொரு சி.சி.டி.வி கமெரா பதிவிலும் அந்த பெண்ணை கண்காணித்தனர். ஒருகட்டத்தில் சைலஜாவிடம் அதிகமாக நெருங்கிய அந்தப்பெண், எதையோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண், மயிலாப்பூரை சேர்ந்த மேரி என்று தெரிந்தது. அவரைப்பிடித்து பொலிசார் விசாரித்த போது நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிசார் வைர நகைகளையும் மீட்டனர். இவர் வாய்பேசமுடியாதவர் என்ற காரணத்தால், இந்த குறைபாட்டினை வைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்