பொலிசாரால் மைதானத்திலிருந்து விரட்டப்பட்ட ஹோக்லி... காரணம் தான் என்ன?...

Published:Tuesday, 11 October 2016, 08:50 GMTUnder:Sport

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் கோஹ்லி அபாரமாக ஆடி 2வது முறையாக இரட்டை சதம் விளாசினார். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 557 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. கோஹ்லி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க கோஹ்லியை போன்ற ஒருவர் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.

அந்த ரசிகர் அப்படியே கோஹ்லியைப் போல் காட்சியளித்தார். அவ்வப்போது கமெராவிலும் அவரது உருவம் காட்டப்பட்டது. இதனால் ரசிகர்களும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க அவரை முற்றுகையிட்டனர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணத்திற்காக பொலிசார் விராட் கோஹ்லியைப் போல் உள்ள அந்த ரசிகரை ஸ்டேடியத்தை விட்டு வெளியேற்றினர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்