ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற 100 வயது மூதாட்டி... இவரது வெற்றிக்கு காரணம் என்னனு தெரியுமா?

Published:Tuesday, 30 August 2016, 19:36 GMTUnder:Sport

மாஸ்டர் கேம்ஸ் எங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் பங்கெடுத்து பதக்கங்களை தனதாக்கி வருகிறார் 100 வயது பெண்மணி மன் கவுர். 100 மீ ஓட்டத்தில் 1 நிமிடம் 21 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

வயதில் சதம் அடித்துள்ள மன் கவுர் திங்கட்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற மாஸ்டர் கேமில் தங்க பதக்கத்தை தனதாக்கி கொண்டிருக்கிறார்.

இதில் சுவரசியமான தகவல் என்னவென்றால் மன் கவுர்தான் இந்தபோட்டியில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் போட்டியாளர்.

தடகள போட்டிகளுடன் குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் போன்ற போட்டிகளில் தங்க பதக்கத்தை வென்றுவுள்ளார் மன் கவுர்

தனது வெற்றி குறித்து மன் கவுர் கூறும்போது, “நான் வெற்றி பெற்றுவிட்டேன். இந்தியாவுக்கு சென்றதும் எனது வெற்றியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என மூச்சி திணற தனது வெற்றியை கொண்டாடி தீர்த்தார் மன் கவுர்.

தாயின் சாதனைக்கு பின்னால் மகன்...

100 வயதிலும் சாதனை நிகழ்த்தி வரும் மன் கவுரின் சாதனைக்கு பின்னால் இருப்பது 78 வயதான அவரது மகன் குருதேவ் சிங் ஆவார்.

குருதேவ் சிங்கும் கடந்த சில ஆண்டுகளாக மாஸ்டர் கேம்மில் தனது தாயாருடன் கலந்து கொண்டு வருகிறார்.

இது குறித்து குருதேவ் சிங் கூறும்போது, “எனது அம்மாவுக்கு 93 வயது இருக்கும்போது வயது மூத்தவர்களுக்கு இடையே நடக்கும் மாஸ்டர் கேம் பற்றி கூறினேன். அப்போதே எனக்கு தெரியும் என் அம்மா இதில் வெற்றிகளை குவிக்க போகிறார் என்று. கடந்த ஏழு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மாஸ்டர் கேம்மில் கலந்து கொண்டு இதுவரை 20 பதக்கங்களை பெற்றிருக்கிறார்.

என் அம்மா போட்டிகளில் பங்கெடுப்பதுடன் மட்டுமில்லாது எங்களது சொந்த மாநிலமான சண்டிகரில் வயதான பெண்கள் தங்களது நாட்களை வீட்டிலேயே செலவிடாமல் மஸ்டர் கேம் போன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார்" என்றார்.

அமெரிக்க மாஸ்டர் கேம் விளையாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனடாவை சேர்ந்த தடகள வீராங்கணை சர்மன் குருக்ஸ் ( 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 400 மீட்டர் ரிலேவில் வெள்ளி பதக்கம் வென்றவர்) மன் கவிரை வெகுவாக பாராட்டி,“மன் கவுரின் இந்த உத்வேகம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மன் கவுர் அனைவரை ஈர்த்துள்ளார். என்னாலும் 50 வயதை கடந்து ஓட முடியும் என்ற நம்பிக்கையை மன் கவுர் அளித்துள்ளார்” என்று கூறினார்.

மாஸ்டர் கேம் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 49 வயதை கடந்த அனைவரும் மாஸ்டர் கேம் விளையாட்டில் பங்கெடுக்கலாம்.


Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்