யூனில் டும் டும் டும்.... அமெரிக்காவில் ஹனிமூன்....

Published:Wednesday, 10 April 2013, 08:38 GMTUnder:Celebrity

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி காதல் ஜோடியின் திருமணம் யூன் மாதம் சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெயில்,கிரீடம் தாண்டவம் உட்பட 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பத்தாண்டுகளாக காதலித்த பள்ளித் தோழி சைந்தவியை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.

இருவரும் ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். நட்பு காதலாக மலர்ந்து இப்போது திருமணம் வரை வந்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு தென்னிந்திய திரை பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியர் அமெரிக்காவிற்கு ஹனிமூன் செல்ல இருக்கின்றனர்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் கையில் அனுராக் காஷ்யப்பின் இந்தி திரைப்படமும், காக்கா முட்டை, ராஜா ராணி,நிமிர்ந்து நில், தலைவா ஆகிய படங்கள் உள்ளன திருமணத்திற்கு முன்பு அவற்றை முடித்துக் கொடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்