பயத்தால் நடைபெற்ற பூனையின் சோகக்கதை!....

Published:Friday, 18 January 2013, 08:19 GMTUnder:Pets & Animals

அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் ஜேக்கப்–போன்னி ரிஷ்டெர் என்ற தம்பதி தங்களது வீட்டில் 4 வயதுள்ள பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் பட்டாசுகளை வெடித்தார்கள். இந்த வெடி சத்தத்தில் கிலி (பயம்) அடைந்த பூனை வீட்டை விட்டு ஓடியது.

பல இடங்களில் தேடியும் அது கிடைக்காததால் மீட்பு குழுவிற்கு தகவல் கொடுத்தனர். சில நாட்கள் கழித்து பூனை சற்று தொலைவிலுள்ள தோப்பில் திரிவதாக தகவல் கிடைக்க, தம்பதி அந்த இடத்திற்கு ஓடினார்கள். ஆனால் அதற்குள் அது இடத்தை மாற்றி சென்றுவிட்டது.

கிட்டத்தட்ட பல வாரத்துக்கு பிறகு 190 மைல்களுக்கு அப்பால் இந்த பூனை இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தம்பதியினர் சென்று பூனையை மீட்டு வந்தார்கள்.

அது எப்படி சிக்கியது என்றால், வெகு தூரத்துக்கு நடந்தே சென்றதால் அது சோர்வடைந்து ஒரு தென்னந்தோப்பில் அனாதையாக நின்றிருக்கிறது. இதை பார்த்த தோட்ட உரிமையாளர் பிடித்து உணவு கொடுத்து பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் செய்தபோது, பூனை உடலில் இருந்த ‘மைக்ரோ ஷிப்’ மூலம் உரிமையாளர் விவரம் தெரியவந்துள்ளது. பிறகு தம்பதிக்கு தகவல் சொல்லி ஒப்படைத்திருக்கிறார்கள்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்