சிங்கத்தைக் கண்டு பீதியடைந்த அமெரிக்கர்கள்

Published:Monday, 14 January 2013, 07:08 GMTUnder:General

அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி(911) தொலைபேசி அழைப்புகள் வந்தன.

காலை 10.20 மணிக்கு வந்த அழைப்பில், நார்ஃபோல்க் பகுதியில் இருந்து மிருகக் காட்சி சாலையில் தப்பிவந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு பெண் புகார் அளித்தார்.

அடுத்து வந்த அழைப்பில், பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித்திரிவதாக ஒருவர் கூறினார்.

இதைப்போன்று தொடர்ந்து அழைப்புகள் வரவே, உஷாரான பொலிசார் விர்ஜினியா மிருகக் காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்புகொண்டு, அங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும்படி அறிவுறுத்திவிட்டு, புகார் வந்த நார்ஃபோல்க் பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர்.

இறுதியில் திடீரென்று பொலிசாரின் கண்ணில்பட்ட சிங்கக்குட்டியைப் பார்த்து அதிர்ந்து போயினர். ஏனென்றால் அது சிங்கமல்ல சிங்கத்தின் தோற்றத்தினை போன்று நாயினை அழகுபடுத்தியிருப்பது தெரியவந்தது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்