தங்க சட்டை அணிந்து புத்தாண்டு கொண்டாடிய மனிதர்

Published:Wednesday, 02 January 2013, 10:30 GMTUnder:Invention

ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து 2013ம் ஆண்டு புத்தாண்டை புனே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வரவேற்றுள்ளார்.

புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் தத்தா புகே என்பவர் சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்.

இவர் ஏற்கனவே 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வலம் வரும் நிலையில் 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார்.

இது வரை யாருமே செய்யாத வகையில் தங்க சட்டை அணிந்து புத்தாண்டை கொண்டாட விரும்பி அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார்.

அதைக் கொண்டு பதினைந்து பொற்கொல்லர்கள் 15 நாட்கள் உழைத்து தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில், பொத்தான்கள் "ஸ்வரோவ்ஸ்கி’ செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

வெறும் தங்க சட்டையாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது என்பதால் அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர். இந்த சட்டையின் தற்போதைய விலை 1.27 கோடி ரூபாய், இதை தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்