போல் கோல்ட்ஸ்டீன் கிளிக் செய்த விலங்குகளின் விசித்திர புகைப்படங்கள்

Published:Friday, 21 September 2012, 15:56 GMTUnder:Pets & Animals

50 வயதான புகைப்படப் பிடிப்பாளர் போல் கோல்ட்ஸ்டீன் உலகெங்கும் சுற்றி விலங்குகளின் அதிசயிக்கத்தக்க செயற்பாடுகளின்  தோற்றங்களைப் படம்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்மையில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் இவரால் கிளிக் செய்யப்பட்ட விலங்கினப் பல்வகைப் படங்கள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அத்தகைய படங்களே இவையாகும்.

ஐந்து குட்டிகளுடன் சிறுத்தை. இப்படம் ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டது.
 
ஆண் சிறுத்தை ஒன்று கென்யாவின் மாசாய் மாராவிலுள்ள ஒரு மரத்திலிருந்து தாவும் போது...
 
 போல்  100 பேருடன் சென்ற கப்பல்  அந்தாட்டிக்காவிலுள்ள பனிமலையில் சிக்கிக்கொண்ட போது அவரது கமராவில் கிளிக்கான  எம்பரர் பென்குவின்கள் மூன்றும் ஒரே வேளை பறக்க முயலும் அற்புதமானகாட்சியாகும்.  இதற்காக போல் ஒரு வாரம் அங்கு காத்திருந்தாராம்.
 

ஒரு காலைப் பொழுதில் ஸ்பிட்ஸ்பேர்கனில் 2 போலார் கரடிக் குட்டிகள் தாயைத் தொடர்ந்து பயணிக்கின்றன.
 

 கென்யாவின் முதலைகள் நிறைந்த மாரா ஆற்றின் ஊடாக இடம்பெயரும் வனவிலங்கொன்று
 

நோர்வேயில்  போலார் துருவக் கரடி ஒன்று நீரின் மேலாக தாண்டிச் செல்லும் போது...
  
நீண்ட வால் குரங்கொன்று 40 அடி உயரமான மரத்திலிருந்து குதிக்கும் போது...
  
இலங்கைக்குரித்தான கடலில் டொல்பின் ஒன்று தாவும் போது...

 


 

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்