பள்ளிக்கு கைகளால் நடந்து செல்லும் சிறுவன்

Published:Friday, 21 September 2012, 10:03 GMTUnder:General

சீனாவில் உள்ள இபின் என்ற இடத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் யான் யாங். இவன் அங்குள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று வந்தான்.

4 ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு திடீரென வாதம் நோய் தாக்கியது. இதில் அவனுடைய 2 கால்களும் செயல் இழந்து விட்டன. முற்றிலும் நடக்க முடியவில்லை.

இதனால் அவன் கைகளால் நடக்க கற்றுக் கொண்டான். இப்போது தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கைகளால் நடந்து பள்ளிக்கு செல்கிறான். கால்களால் நடப்பது போலவே அவனால் கைகளால் வேகமாக நடக்க முடிகிறது. அவனது புத்தக பையை மட்டும் சக மாணவர்கள் எடுத்து செல்கின்றனர்.

சிறுவனை பள்ளிக்கு வாகனத்தில் அனுப்ப அவனது குடும்பத்தில் வசதி இல்லை. தந்தை உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். தாயார் சம்பாதிப்பதில்தான் அந்த குடும்பமே நடக்கிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்