திருப்பதியில் இரகசிய திருமணம் செய்த நடிகை அனன்யா

Published:Wednesday, 08 August 2012, 07:25 GMTUnder:Celebrity

நடிகை அனன்யா, தன் காதலன் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை ஆஞ்சநேயனின் தந்தை கோபாலா கிருஷ்ணனே தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

கொலிவுட்டில் நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யாவுக்கும் கேரளா தொழிலதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதன்பின்பு, ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாக அனன்யா பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனே நிச்சயதார்தத்தை ரத்து செய்து விட்டு அனன்யாவை வீட்டில் அடைத்தனர்.

இந்நிலையில் நடிகை அனன்யா வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் தந்தை கோபால கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, என் மகள் எங்களுக்கு துரோகம் செய்து விட்டாள். அவளும் ஆஞ்சநேயனும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றார்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்