குர்திஷ்தானில் கழுதைக்கு கௌரவச் சிலை

Published:Tuesday, 31 July 2012, 12:18 GMTUnder:Entertainment

எத்தனையோ அரசியல் கட்சியின் பெயர்களை நாம் அறிந்து வைத்து இருக்கின்றோம். ஆனால் கழுதை கட்சி பற்றி தெரியுமா?

கழுதை என்று நாம் மற்றவர்களை திட்டுகின்றோம். அவலட்சணம், அசிங்கம், முட்டாள்தனம் ஆகியவற்றின் அடையாளமாக கழுதையை காண்கின்றோம்

ஆனால் ஈராக்கில் உள்ள குர்திஷ்தான் பிராந்தியத்தில் கழுதைக்கு சிலை எடுத்து விழா நடத்தப்பட்டுள்ளது. ஐந்து அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டு கோர்ட், சேர்ட், கழுத்துப் பட்டி ஆகியவற்றை அணிந்திருக்கின்ற வகையில் கழுதைச் சிலை செதுக்கப்பட்டு இருக்கின்றது.

ஏழு மாதங்களாக வடிக்கப்பட்ட இந்தச் சிலையின் பெறுமதி 2500 பவுண்டு. இப்பிராந்தியத்தை சேர்ந்த கழுதைக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் தான் இச்சிலையெடுப்பு வைபவத்தை நடத்தி இருக்கின்றனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்