செம்மறி ஆட்டுடன் காதல் குடும்பம் நடத்தும் பெண் மான்!

Published:Friday, 13 July 2012, 19:10 GMTUnder:Pets & Animals

காதல் என்பது உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.

மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.

இரு மிருகங்களின் காதல். அதுவும் கலப்பின காதல்.

ஆட்டுக் கடா ஒன்றுக்கும் பிணை மான் ஒன்றுக்கும் இடையிலான காதல்.

சீனாவில் உள்ள மிருக காட்சிச் சாலை ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பிராணிகளில் இவையும் அடங்கப் பெறுகின்றன.

ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் காதல் மலர்ந்து விட்டது.

ஆட்டின் உரோமங்களை மிகவும் ஆசையோடு வருடிக் கொடுக்கின்றது மான். இப்பெண்மானுடன் வேறு ஆண் மான்கள் சில்மிஷம் செய்ய முயன்றால் போட்டுத் தாக்குகின்றது ஆடு.

இவை இரண்டும் கிட்டத் தட்ட ஒரே நேரத்தில் பிறந்து இருக்கின்றன. தொடர்ந்து ஒரே பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒன்றின் மீது ஒன்று ஈர்ப்பு கொண்டதற்கு இவை காரணமாக இருக்க கூடும் என்கின்றனர் மிருக காட்சிச்சாலை அதிகாரிகள்.

ஆனால் இம்மிருக காட்சிச்சாலையின் வரலாற்றில் முன்பு எந்தவொரு பிராணிகளும் கலப்பின காதல் செய்ததே இல்லை.

ஆட்டுக்கும், மானுக்கும் இடையிலான இக்காதலை மிருக காட்சிச்சாலை அதிகாரிகள் மாத்திரம் அன்றி இங்கு வருகின்ற பொதுமக்களும் மிக நன்றாகவே அறிவர்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த காதலர் தினத்தில் அதிகாரிகளால் தடபுடலாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இத்திருமணம் உள்ளூர் மக்களின் கவனத்தை மாத்திரம் அன்றி உலக ஊடகங்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்து இருந்தது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்