இளம் பெண்ணை பாலியல் சித்திரவதை செய்த 30 பேரில் நால்வர் கைது

Published:Friday, 13 July 2012, 18:08 GMTUnder:Crime

30 பேர் அடங்கிய ஒரு கும்பல், ஓர் இளம் பெண்ணைக் கடுமையான பாலியல் சித்திரவதை செய்துள்ள சம்பவம் கௌகாத்தியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

கௌகாத்தியில் உள்ள பப்பிற்கு வந்த இளம்பெண்ணை தலை முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி அடித்துத் தாக்கியுள்ளது 30 பேர் அடங்கிய குழு. அத்தோடு அப்பெண்ணை கால்களால் உதைத்தும், மிதித்தும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

மேலும், அவரின் உடைகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே களைந்தும் இருக்கின்றனர். சுமார் அரைமணி நேரம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, இதை உள்ளுர் தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்து ஒளிபரப்பாக்கியது. அந்த தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் 30 பேரில் ஒரு சிலரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் பொலிஸாரால் 4 பேரை மாத்திரமே கைது செய்ய முடிந்தது.

சமூக வலைதளங்களான யூ டியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் அந்த வீடியோ வெளியிடப்பட்டதோடு, அதில் இருப்பவர்களை அடையாளம் தெரிந்தால் தகவலளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்