ஆண்டின் சிறந்த வில்லன் அஜித்

Published:Wednesday, 20 June 2012, 08:44 GMTUnder:Celebrity

விஜய் டி.வி. நடத்தும் திரையுலக விருது விழா ஆறாவது முறையாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சென்று ரசிகர்களின் நேரடி வாக்குப் பதிவின் மூலம் இந்த விருதுகளுக்கான நட்சத்திரங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இதில் 2011ஆம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
 
 2011ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களின் அடிப்படையில் அவ்வாண்டுக்கான சிறந்த நடிகர் விருதினை தெய்வத் திருமகள் திரைப்படத்துக்காக விக்ரம் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது எங்கேயும் எப்போதம் திரைப்படத்தில் நடித்த அஞ்சலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 அத்துடன், ஆண்டின் சிறந்த வில்லன் விருதினை அஜித் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, பிடித்தமான நாயகன் விருதும் அஜீத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்து 143 திரைப்படங்களில் இருந்து 34 விருதுகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
 
 இதனடிப்படையில், சிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை சந்தானமும் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதினை கோவை சரளாவும் பெற்றுள்ளனர்.
 
 அத்துடன், சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது தனுஷ்க்கும் ஆண்டின் பிடித்தமான திரைப்படத்துக்கான விருது 'கோ'வுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
 அத்துடன், சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை வைரமுத்து தட்டிச்சென்றுள்ளார். செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்