விவாகரத்து வழக்கு - முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!

Published:Wednesday, 13 June 2012, 19:37 GMTUnder:Celebrity

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனது இளைய மகளை முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயனிடம் ஒப்படைத்தார் நடிகை ஊர்வசி.

தமிழ் திரை உலகில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் பிறந்தனர்.

ஆனால் ஊர்வசி - மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

ஆனால் அவர்களில் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர். எனவே இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து ஊர்வசி தன் இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார். எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு மகளை அழைத்துப் போனார் மனோஜ் கே ஜெயன்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்