லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி

Published:Tuesday, 27 March 2012, 18:39 GMTUnder:Celebrity

கோச்சடையான் படத்திற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள தமிழ் ரசிகர்களை சந்தித்தார். தனது மகள் ‌சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கோச்சடையான்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். கூடவே இவர்களுடன் ஆதி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் சூட்டிங்கிற்காக லண்டனில் முகாமிட்டுள்ளனர் ரஜினி, சவுந்தர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர்.

சூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் ரஜினி, லண்டனில் வாழும் தமிழ் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி பொங்க கூறிய தமிழ் ரசிகர்கள் சதிஷ் துரைசாமி மற்றும் கார்த்திக் ராகவன், ரஜினி சார் லண்டன் வந்த 17ம் தேதி முதல் அவரை பார்க்க ஆவலாய் இருந்தோம்.

 இதற்காக லண்டன் ஏர்போட்டில் காத்திருந்தோம். ஆனால் முடியவில்லை. அதன்பிறகு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்பி, அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலுக்கு செல்வோம். அங்கும் முடியவில்லை.

கடைசியாக நேற்று (25ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் படம் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகத்தை பரிசளித்தோம். பின்னர் அவரிடம் பேசுகையில், சார் உங்களை பார்க்க ஒரு வார காலமாக முயற்சி பண்ணினோம்.

இப்போது தான் முடிந்தது என்றோம். அதற்கு அவர் அச்சச்சோ… ஏன்பா இப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க என்றார். பின்னர் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம். அவரும் சம்மதித்தார். போட்டோவும் எடுத்தோம்.

என் வாழ்வில் அவரைப் போன்று ஒரு உன்னதமான மனிதரை பார்த்ததில்லை. அவருடன் ஒரு தடவையாவது போட்டோ எடுக்க வேண்டும் என்று என்னுடைய 35 வருஷ கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது.

 இதை அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான் என்று கூறினார்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்