அந்த காலத்துல பணத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட விசித்திர பொருட்கள் தெரியுமா?

Report
163Shares

ஒரு காலத்தில் தங்கத்தை காட்டிலும் அதிக மதிப்பு அலுமினியத்திற்கு இருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! அப்படியும் ஒரு காலம் இருந்தது.

இது தான் பணம், இதன் மதிப்பு இது, இதற்கு இந்த பொருட்கள் தான் வாங்க முடியும் என காகிதங்கள் மற்றும் நாணயங்களில் ஆச்சிடும் முன்வரை, ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருந்தது.

இந்த பொருள் இத்தனை கொடுத்தால், அதற்கு மாற்றாக இந்த பொருள் இத்தனை தரப்படும் என மதிப்பிட்டிருந்தார்கள். அது தான் பண்டமாற்று முறை. ஒரு படி உப்பிற்கு, இரண்டு படி நெல் என உதாரணத்திற்கு கூறலாம்.

ஆனால், பண்டமாற்று முறை மற்றும் அச்சிட்டஆச்சிட்ட நாணய மதிப்பு முறைக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் ஆங்காங்கே சில விசித்திரமான பண முறை பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நான்கு பண முறைகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

உப்பு!

நூற்றாண்டுகளுக்கு முன்னர் உப்பு தான் நம்மை சுற்றி சூழ்ந்திருந்தது. உலகின் பல சமூகங்களில் உப்பு தான் ஊதியமாக தரப்பட்டு வந்தது.

ஏன் நமது தமிழிலேயே எடுத்துக் கொள்ளுங்களேன், சம்பளம் என்ற சொல்லே சம்பா + அளம் என்ற இரண்டு சொல்லின் சேர்க்கை தான். சம்பா என்றால் நெல், அளம் என்றால் உப்பு. வேலை பார்த்தவர்களுக்கு நெல் மற்றும் உப்பை தான் ஊதியமாக அளித்து வந்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல இடங்களில் உப்பு சம்பளமாக தரப்பட்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

கடல் வர்த்தகம்!

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உப்பு ஒரு முக்கியமான வர்த்தக பொருளாக இருந்து வந்துள்ளது. கடலில் வர்த்தகம் செய்வோர் உப்பை எடுத்து சென்று விற்று வந்துள்ளனர்.

பண்டைய ரோமாபுரியில், படையில் பணிபுரிந்து வந்த வீரர்களுக்கு ஊதியத்தின் பங்காக உப்பும் இருந்துள்ளது. கிரேக்க, ரோமர்கள், மினரல்கள் கொடுத்து அடிமைகளை வாங்கி வரும் பழக்கமும் கொண்டிருந்திருக்கிறார்கள்.

"இவன், இந்த உப்பின் மதிப்புக்கு இணையானவன் அல்ல.." என்று கூறும் அளவிற்கு உப்பின் மதிப்பு அந்நாளில் பெரிதாக இருந்திருக்கிறது.

ராய் கற்கள்!

தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு யாப் (Yap). தோற்றத்தின் அளவை வைத்து பார்க்கையில் உலகின் பெரிய பணம் இங்கு தான் இருந்துள்ளது.

சில நூறு வருடங்களுக்கு முன்னர் அங்கே படிந்திருந்த சுண்ணாம்பு கற்களை வட்ட தட்டுகளாக செதுக்கி, அதை படகுகளில் எடுத்து சென்று தங்கள் சமுதாயத்திற்கு பொருளாதாரம் ஈட்டி வந்துள்ளனர்.

டவுரி!

மிக பெரிய அளவில் ஒரு தனி நபரால் தூக்க முடியாத அளவிற்கு அந்த கற்கள் இருந்துள்ளன. அந்த கற்கள் ஊரின் ஒருபகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

பெரிய வர்த்தகம் அல்லது திருமணத்திற்கு டவுரியாக கொடுக்கப்பட வேண்டிய சூழல் வந்தால், அந்த கற்களின் உரிமையாளர் அதை வேறு ஒரு நபருக்கு கைமாற்றி கொடுத்துவிடுவார்.

சாக்லேட்!

சாக்லேட் என்றால் நாவில் எச்சில் சுரக்கும். ஆனால், கொக்கோ பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் இதை பணமாகவும் அமெரிக்கர்கள் பயன்படுத்தியுள்ளனர். 16ம் நூற்றாண்டில் அமெரிக்கர்கள் வர்த்தகத்தில் கொக்கோ பீன்ஸ் பணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொக்கோ பீன்ஸ்களை மத வழிபாடுகளில் வைத்து கொண்டாடவும், பரிசுகளாக தந்து மகிழ்ந்தும் வந்துள்ளனர்.

தக்காளி, வெண்ணை பழம்!

ஸ்பானிஷ்காரர்கள், இதை பணமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். 1545ல் ஒரு கொக்கோ பீன் மூன்று முட்டைகளுக்கு, ஒரு வெண்ணை பழம் மற்றும் தக்காளிக்கு இணையான மதிப்பு கொண்டிருந்ததாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

அணில் தோல்!

விலங்குகளின் தோலுக்கு எப்போதுமே மதிப்பு இருக்கிறது. முக்கியமாக புலியின் தோல் இப்போதும் வேட்டையாடி விற்கப்படுகிறது. ஆனால், அணிலின் தோல் பணமாக இருந்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

7326 total views