மனிதர்களுக்கு மரணமில்லா மருந்து பற்றி தெரியுமா?

Report
226Shares

ஒரு மனிதன் இறப்பில்லாமல் வாழ முடியுமா என்றால் நிச்சயம் வாழமுடியும். இன்றைய அறிவியலாளர்களும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கான மருந்தை பல ஆயிரடம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் சித்தர்கள் கண்டறிந்துவிட்டனர் என்பதே உண்மை. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

போகர் சித்தரை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம், பழனி முருகனின் சிலையை உருவாக்கியது இவர் தான். இவர் மனதில் ஒரு யோசனை எழுந்தது. நமக்கு தெரிந்த சித்த கலைகளை கொண்டு நாம் ஏன் மனிதர்களுக்கு இறப்பற்ற நிலையை உருவாக்க கூடாது என்று நினைத்தார். நினைத்ததோடு நிற்காமல் அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.

பல நாட்களுக்கு பிறகு அதற்கான வழியை கண்டறிந்தார். கிட்டத்தட்ட 4448 மூலிகைளை ஆய்விற்கு உட்படுத்தி அதை 81 பாஷாணங்களாக மாற்றினார். பின் அந்த 81 பாஷாணங்களையும் பலவகையான ஆய்விற்கு உட்படுத்தி அதில் இருந்து ஒன்பது பாஷாணங்களை பிரித்தெடுத்தார். அந்த ஒன்பது பாஷாணங்களையும் மருந்தாக மாற்ற பல வகையான அறிவியலை கையாண்டார். ஒருவழியாக மனிதர்களுக்கு இறப்பில்லாத மருந்தை அவர் கண்டறிந்தார்.

இதை கண்ட மற்ற சித்தர்கள் இது இயற்கைக்கு எதிரானது என்று போகரிடம் கூற அவரும் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார். ஆனால் அவருக்கோ தன்னுடைய பல வருட உழைப்பை வீணாக்க மனம் இல்லை. இதனை அடுத்து தான் செய்த நவபாஷாணத்தில் சில மாறுதல்களை புகுத்தி அதில் அற்புதமான தண்டாயுதபாணி சிலையை செய்தார். அதுவே இன்று பழனியில் இருக்கிறது.

இன்றும் அந்த சிலையில் பல அற்புதமான மருத்துவ ரகசியங்கள் அடங்கியுள்ளன. பழனி முருகனுக்கு செய்யும் அபிஷேக நீரை அனுந்தினாலே போதும் தீராத நோய்யெல்லாம் தீர்ந்து போகும். இதனாலேயே நோயாளிகள் பலர் பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம்.

சரி, பிறப்பற்ற வாழ்வு என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் மனிதனுடைய DNAவை சுத்திகரிப்பதன் மூலம் அவன் சுமார் 1200 ஆண்டுகள் வரை இறப்பின்றி வாழமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் DNA வை சுத்திகரிப்பது எப்படி என்பதை யாரும் இன்றுவரை கண்டறியவில்லை. ஆக இறப்பில்லாமல் வாழ்வதென்பது மனிதர்களுக்கு சாத்தியமே. ஆனால் அதற்கான வழியை தான் இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை.எடி