நொடிப்பொழுதில் காயங்களை குணப்படுத்தும் பசை கண்டுபிடிப்பு!

Report
94Shares

உடல் தோல் வெட்டுப்பட்ட காயம் மற்றும் சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் காயம் போன்றவற்றினை ஒரு நிமிட நேரத்தில் ஒட்டவைக்கும் பசை ஒன்றினை பொஸ்டன் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

வெட்டுக் காயங்களை தைக்கும் முறையிலேயே அதிகமான சிகிச்சை முறைகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் அதற்கு மாற்றீடாக வெட்டுக்காயங்களை 60 செக்கன்களுக்குள் ஒட்டவைக்கும் முறையில் நவீன விதமான பசை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Metro எனப்படும் குறித்த பசையினை தோல் காயங்களுக்கு மட்டுமல்லாமல் உடலினுள் ஏற்படும் காயங்களுக்கும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறிப்பிட்டளவு காயங்களுக்கு மாத்திரமே இதனைப் பயன்படுத்தமுடியும் எனவும் பாரிய அளவிலான காயங்களுக்கு இதனைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.