கறுப்பு பண முதலைகளுடன் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தலைமைசெயலாளர் ராம்மோகன்ராவ் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மற்றும் தங்கம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றபட்டன.

இந்நிலையில் தற்போது முதல்வராக பதவியேற்றிருக்கும் பழனிச்சாமிக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, சுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற தொழிலதிபருக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி முறையாகும். இந்த சுப்பிரமணியன் சேகர் ரெட்டியின் பிசினஸ் பார்ட்னர்.

எடப்பாடியார் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சேகர் ரெட்டிக்கு அதிக அளவில் அரசின் பொதுப் பணித்துறை திட்டங்களை நிறைவேற்றும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்களை பதுக்கி வைத்ததற்காக, சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மகனின் சகலை என்றும் கூறப்படுகிறது.

மேற்கண்டவாறு பழனிச்சாமிக்கும், சேகர் ரெட்டிக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியது என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.