குஜராத்தில் பாடகர் மீது கட்டுகட்டாக பொழியும் பனமழை...!

குஜராத்தில் பாடகர் மீது பணக்காரர்கள் பனமழையை அள்ளி வீசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கத்வி என்ற பாடகர் மீது செல்வந்தர்கள் 2000,500 என எல்லா வித புது நோட்டுக்களையும் கட்டுகட்டாக அவர் மீது அள்ளி வீசுகின்றனர்.

தற்போது பரவி வரும் இந்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், நாட்டில் 75 சதவிகித மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழ் தான் உள்ளார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகின்றது.

அப்படியிருக்கையில், தங்களது ஆடம்பரத்தை காட்டுவதற்காக அதே இந்தியாவில் உள்ளவர்கள் பணத்தை அள்ளி வீசுவதால் இந்தியா ஏழை நாடா அல்லது இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகளால் ஏழை நாடாக ஆக்கப்பட்டுள்ளதா? என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மேலோங்கி வருகின்றன.