ஒரே ஒரு மிஸ்டு கால்... தெருவிற்கு வந்த கோடீஸ்வரர் மனைவி

வில்சன் மத்திய அரசின் உயர் அதிகாரி. போலீஸ் காவலோடு தான் வலம் வருவார். அவரின் மனைவி ராணி. பெயருக்கேற்றார் போல தேவதை மாதிரி இருப்பார். இரண்டு குழந்தைகள். அவர்கள் படிபிற்காக தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட தலைநகரில் சொந்த பங்களாவில் இருந்தார்கள். வில்சன் குடும்பம் மிக வசதியானது.

வீட்டில் மட்டும் மூன்று உயர்ரக கார்கள் உண்டு. டெல்லியில் இருந்து மாதம் ஒருமுறை வந்து போவார். ராணிக்கு ஒரு நாள் ஒரு மிஸ்டு கால் வந்தது. ராணி யார் என்று கேட்க அந்த நம்பருக்கு போன் செய்தார்.

ஒரு இனிமையான ஆண் குரல் மன்னிப்பு கேட்டான். அவன் பெயர் ரவி. அந்த காந்தக் குரல் ராணிக்கு பிடித்துப் போனது. இரவு மீண்டும் போன் செய்து ரவி மன்னிப்பு கேட்டான். அவளும் ஒகே பரவாயில்லை என்றாள்.

என்ன பண்றே என்று கேட்டாள். ரவி கல்லூரி மாணவன் என்றான். ஊரென்ன? என்ன படிப்பு என்று கேட்டாள்? அவ்வளவு தான் இவர்களின் உறவு திசை மாறிச் சென்றது.

தினமும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் இவர்களின் உறவு திசைமாறிச் சென்றதை அக்கம் பக்கத்தினர் மூலம் பொலிஸ் கணவன் அறிந்தார். அவனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருந்தாள். எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அலறி நடுங்கிப் போய் உட்கார்ந்து விட்டாள்.

அடித்தான் வில்சன். குடும்பத்தைக் கூட்டி விட்டான். இனி உங்கள் பெண்ணை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டான். ரவியை நைஸாகப் பேசி வர வைத்தார்கள். உறவினர்கள் அடித்து நொறுக்கி போலீஸில் ஒப்படைத்தார்கள்.

பிள்ளைகளை மட்டும் அழைத்துக் கொண்டு பங்களாவைப் பூட்டிவிட்டு டெல்லி சென்று விட்டான் வில்சன். கட்டுப்பாடு என்பது கணவன் ஊரில் இல்லாத போது தான் பெண்களுக்கு அவசியம். இன்று ராணி அம்மா வீட்டில் அனாதையாக இருக்கிறார்.