நீதிபதியையே மிரள வைத்த ஜெயலலிதாவின் ஆபரணங்கள்? முழுசா படிக்கவும்! வழக்கின் முக்கிய மூலாதாரம்

மறைந்த முதல்வரும், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான ஜெயலலிதாவின் சொத்துக்களிலேயே சிறப்பு நீதிமன்ற நீதிபதியையே வியக்க வைத்தது அவரது ஒட்டியானம்தான். அந்தப் பழைய கதையை திரும்பப் பார்ப்பதே சுவாரஸ்யமான விஷயம்தான்.

சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கிய ஆரம்பப் புள்ளியே ஜெயலலிதாவால் வளர்ப்பு மகன் என அறிவிக்கப்பட்ட சுதாகரனின் பிரமாண்டத் திருமணம்தான். அந்தத் திருமணத்தின்போது ஜெயலலிதா அணிந்திருந்ததுதான் இந்த பிரமாண்ட ஒட்டியானம்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே கலர் பட்டுச் சேலையில், இந்த ஒட்டியானத்தை அணிந்திருந்த புகைப்படத்தை மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. இந்த ஒட்டியானத்தைப் பார்த்துத்தான் அப்போதைய சிறப்பு நீதிபதி சம்பந்தம் ஆச்சரியமடைந்தார்.

ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மதிப்பிடும் பணி 2000மாவது ஆண்டுதான் தொடங்கியது.

அப்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் அதாவது நகைகள் 3 பெரிய பெட்டிகளில் வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 3 பெரிய சூட்கேஸ்களில் கொண்டு வரப்பட்ட நகைகளை அப்போதைய தனி நீதிபதி சம்பந்தம் பார்வையிட்டார்.

இதில் ஜெயலலிதாவின் ஒட்டியானம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மொத்தம் 1044 கிராம் எடை கொண்டது அந்த ஒட்டியானம். அதில் மொத்தம் 2389 வைரக் கற்கள், 18 எமரால்டு, 9 ரூபி கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீதிபதி சம்பந்தம் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

கடந்த1995ம் ஆண்டு நடந்த சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும், சசிகலாவும் இந்த ஒட்டியானங்களை அணிந்திருந்தனர். ஜெயலலலிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த சம்பவம் அது. சொத்துக் குவிப்பு வழக்கின் மூலாதாரமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.