கூவத்தூரில் கைதியாக இருந்த கருணாஸ்... மனைவியுடன் பேசிய ஆடியோ லீக்!

நடிகர் கருணாஸ் ஒரு பாடகராக, காமெடி நடிகராக சினிமாவில் வளர்ந்து வந்த சூழலில், ஓரளவு பணப்புழக்கம் வந்தவுடன்,அரசியலை குறிவைத்தே ஒரு ஜாதி அமைப்பை தொடங்கினார். அதன் மூலம், அதிமுகவில் ஒரு சட்டமன்ற தொகுதியும் வாங்கி, அதில் ஜெயித்து எம்.எல்.ஏவாகவும் ஆகிவிட்டார்.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் அரசியல் சூழல்கள் மாறின. ஜெயலலிதா மறைந்தார். அவர் தோழி சசிகலா வசம் கட்சி போனது. அவர் முதல்வராக வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர் சிறை சென்றவுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் வெளி உலக தொடர்பு இன்றி, குடும்பத்தினரின் தொடர்பு இன்றி உள்ளனர் என்று சொன்னதை வைத்து ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அது கருணாஸ் கூவத்தூரிலிருந்து தன் மனைவியிடம் பேசியது என்று சொல்லப்பட்டது.

ஓபன் பண்ண…மீம்ஸ் வீடியோ, ஆனா, இன்ட்ரெஸ்டிங்கா பண்ணி இருக்காங்க. நீங்களே பாருங்கள்.