பிரான்ஸ் ஜனாதிபதியின் ரகசிய காதல்

மிருக குணம் கொண்ட ஒருவனை நல்ல மனிதனாவும், ஒரு நல்ல மனிதனை மிருகமாகவும் மாற்றுவதில் காதலுக்கு முக்கிய பங்கு உண்டு.

திருமணத்திற்கு முன்னர் வந்தால் அது காதல், திருமணத்திற்கு பின்னர் வேறு ஒரு நபருடன் வந்தால் அது கள்ளக்காதல். காதலில் இருக்கும் சுவாரசியத்தை விட கள்ளக்காதலில் இருக்கும் சுவாரசியமே தனிதான்.

அதுவும், திரை அல்லது அரசியல் பிரமுகர்கள் வாழ்வில் இது வந்துவிட்டால் உலக அளவில் பிரபலம் அடைந்துவிடும்.

அப்படி, பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி ஹேலாண்டேவின் ரகசிய காதல் பல்வேறு பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தி.

இவர், சொந்த வாழ்வில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். இவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் ஜூலி காயட் உடன் காதல் உறவில் இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை கசிந்துள்ளன.

இவருக்கு பாரிஸில் ஒரு குடியிருப்பு இருப்பதாகவும். அங்கு தான் இந்த 41 வயது நடிகையை சந்தித்து வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.