மாட்டிக் கொண்ட மனோபாலா..! சசிகலாவை கிண்டலடித்ததாக புகார்..

அதிமுக தலைமை கழக நட்சத்திர பேச்சாளரும், நடிகருமான மனோபாலா தமிழக முதல்வர், பன்னீர்செல்வத்தையும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவையும் கிண்டலடித்து வாட்ஸப்பில் செய்தி அனுப்பியதாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக சினி சரவணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது,

தமிழக மக்களும், அதிமுக நிர்வாகிகளும் ஒரு நல்ல தாயை இழந்து செய்வதறியாது தவித்து தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சோகமான தருணத்தில், நமது கழகத்தின் நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா அவர்கள் தமிழக முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவர்களையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் சின்ன அம்மா சசிகலா அவர்களையும் சினிமா நடிகர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குரூப்பில் கேலி கிண்டல் செய்துள்ளார்.

இதனை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும், இது குறித்து, சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் சார்பாக புகார் கொடுக்கப்படும் என்றும், பின்பு, அதிமுக தலைமை கழகத்திலும் போயஸ் கார்டனிலும் புகார் மனு கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீழ்ந்தாலும் எழுந்தாலும் அதிமுக - மட்டுமே !அம்மா மீது சத்தியம் சினி சரவணன் . அஇஅதிமுக ஆலந்தூர் தொகுதி என்றும் குறிப்பிட்டிருந்தார்.